;
Athirady Tamil News

யாழ். பழைய பூங்காவில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை

0

உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பழைய பூங்காவில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 10.00 மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

சென்ற ஆண்டு இதே நாளில் அரசாங்க அதிபர் தலைமையில் பழைய பூங்காவை பசுமைக்காடாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டி தொடர்ந்து சீராக நீர் ஊற்றி வந்ததன் பயனாக தற்போது 275 மேற்பட்ட மரக்கன்றுகள் செழிப்பாக வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

‘மரம் நடுகை’ நமது எதிர்காலத்திற்கான பெரிய முதலீடாகும். எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தூய்மையான காற்று, வெப்பமயமாதலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட இயற்கையைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றாடலைப் பாதுகாப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.