;
Athirady Tamil News

பலத்த காற்று வீசும் ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.