;
Athirady Tamil News

எரா​வான் ஆலய குண்டு வைப்பு; 2 பேருக்கு மரண தண்டனை

0

தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான எரா​வான் வழி​பாட்​டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார். எரவான் என்பது இந்திரனின் வாகனமான மூன்று தலை வெள்ளை யானையைக் குறிக்கும்.

20 பேர் உயி​ரிழந்​தனர்…. 120-க்கும் மேற்​பட்​டோர் காயம்
பிரம்மனின் உருவமும் இந்த யானையும் இணைந்து தாய்லாந்து கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி​ வாய்ந்த குண்டு வெடித்​த​தில் 20 பேர் உயி​ரிழந்​தனர்.

120-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த குண்​டு​வெடிப்​பு நடந்த சிறிது நேரத்​தில் சீனா​வின் உய்​குர் முஸ்​லிம் சமூகத்தை சேர்ந்த யுசுபு மியரைலி, பிலால் முகமது ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

வீடியோ பதிவு​கள், கைரேகைகள் மற்​றும் பிற ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் இவர்கள் இந்த குண்​டு​ வெடிப்​புடன் தொடர்​புடைய​வர்​கள் என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த வழக்​கில் தெற்கு பாங்​காக் குற்​ற​வியல் நீதி​மன்​றம் இரு​வருக்​கும் நேற்று மரண தண்​டனை விதித்​தது.

இவர்களுக்கு எதி​ராக வலு​வான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் தாங்​கள் குற்​ற மற்​றவர்​கள் என்​பதை நிரூபிக்க அவர்​களால் போது​மான ஆதா​ரங்​களை வழங்க முடிய​வில்லை என்​றும் நீதி​மன்​றம் தெரிவித்​துள்​ளது. இந்​தக் குண்​டு​வெடிப்பு தொடர்​பாக அதி​காரி​கள் 17 சந்​தேக நபர்களை அடை​யாளம் கண்​டனர்.

ஆனால் 3 பேர் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டனர். ஆதா​ரங்​கள் இல்​லாத​தால், தாய்​லாந்து பெண் ஒரு​வர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் 2024-ல் கைவிடப்​பட்​டன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.