;
Athirady Tamil News

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி

0

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வாகனப் பொறிமுறைக் (ஆட்டோமொபைல்) கற்கை நெறியைப் பயின்று வருபவராவார்.

அவர் நேற்று (21) பிற்பகல் களுமுல்லை தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள கடலில் குளிக்கச் சென்றபோது, நீரோட்டத்திற்கு (அலைக்கு) சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார், உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் களுத்துத்துறை – கட்டுக்குருந்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் களுத்துறை தலைமையகப் பொலிஸார் மீலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.