;
Athirady Tamil News

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது! மரண தண்டனை விதிப்பா?

0

ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற போர்களில், ஈரானிய கட்டமைப்புகள் குறித்த உளவாளிகளின் தகவலின் அடிப்படையில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், தலைவர்கள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், ஈரான் அரசு அந்நாட்டில் கைது செய்யப்படும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையைக் கடுமையாக்கி உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.

இருப்பினும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.