;
Athirady Tamil News

விபத்தில் 22 வயது இளைஞன் பலி

0

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.