;
Athirady Tamil News

95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்

0

ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

95 பேருடன் கவிழ்ந்த படகு

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

90 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணம் செய்த இந்த படகு மாவட்ட மேம்பாட்டு நிதியத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே இந்த கரீபா ஏரி இயற்கையான எல்லையாக விளங்குகிறது.

மீட்பு பணிகளில் ஜிம்பாப்வே தேசிய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இது குறித்து முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.