அதிவேக வீதி வருமானம் 12.4 கோடியைத் தாண்டியது!
நாட்டில் கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 325,316 ஆகும். ஓகஸ்ட் 26 ஆம் திகதி 163,763 வாகனங்கள் பயணித்துள்ளது.
அத்துடன், அன்றைய தினம் ஈட்டப்பட்ட வருமானம் 60,409,995 ரூபாயாகும். ஓகஸ்ட் 27 ஆம் திகதி அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை 161,553 ஆகும். அன்றைய தினம் 64,164,930 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட வீதி (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.