;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; அகில இலங்கையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவன்

0

நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலைக்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.