;
Athirady Tamil News

வவுனியா- பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும்!

0

வவுனியா- பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும்!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கின் ஒரேயொரு மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம்
விரைவில் விடுவிக்கப்படுமா ஏன புனர்வாழ்வு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது புனர்வாழ்வு அதிகாரசபையின் பொறுப்பதிகாரியால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைந்துள்ள கட்டிடம் கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் புனர்வாழ்வு இணைப்பு காரியாலயமாகவும் செயற்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றுவோருக்கான பயிற்சிகளை வழங்கும் முக்கிய நிலையமாக நீண்டகாலமாக இயங்கி வந்த இந்தப் பயிற்சி நிலையத்தை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பயிற்சிகல்லூரி கட்டடத்தை விரைவாக விடுவித்து புனர்வாழ்வு காரியாலத்தை விரைவில் விடுவித்து அங்கு செயற்ப்பட்டுவரும், புனர்வாழ்வு மத்திய நிலையம். அனுராதபுரம், இப்பலோகம பகுதிக்கு விரைவில் மாற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.