முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!
முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.
இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது மனித செயற்பாடுகள் காரணமாக உருவான நிலையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.