;
Athirady Tamil News

‘தோல்வியடைந்த நாடு’ என்று விமர்சித்த டிரம்ப்… ஐ.நா. கூட்டத்தில் இருந்து கியூபா தூதர்கள் வெளிநடப்பு

0

வாஷிங்டன்,

ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கையெழுத்து
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசும்போது, கியூபாவை ஒரு ‘தோல்வியடைந்த நாடு’ என்று மிகக் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஐ.நா. கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்பின் பேச்சைக் கண்டித்து, அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே கியூபா நாட்டு தூதர்கள் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், தங்களது நாட்டின் சுதந்திர உரிமையை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கியூபா வெளியுறவு மந்திரி புரூனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாகவே கடுமையான அரசியல் பகை நிலவி வருகிறது. கியூபாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.