;
Athirady Tamil News

காங்கோ: 8,000-ஜ கடந்த எபோலா தொற்று பாதிப்பு

0

காங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது.

சமீபத்திய அரசு தரவுகளின்படி, காங்கோவின் 7 மாகாணங்களுக்கு உள்பட்ட 63 சுகாதார மண்டலங்களில் 8,067 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3,901 போ் உயிரிழந்துள்ளனா். இறப்பு விகிதம் 48 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு இதுவரை முறையான சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ கண்டறியப்படவில்லை என்பதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ அரசு கடுமையாகத் திணறி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.