கடையை உடைத்து சீனி பைகளை வீதியில் வீசிய யானை; புதுக்குடியிருப்பில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோம்பாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் கிராமத்துக்குள் புகுந்த யானை வீட்டு காணிகளுக்குள் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள கணொளி வெளியாகியுள்ளது.
இதன்போது கோம்பாவில் நான்கு சந்தியில் அமைந்திருந்த கடையொன்றையும் யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அத்துடன், கடைக்குள் இருந்த சீனி பைகளை எடுத்து சாப்பிட்ட பின்னர், அவற்றை வீதியில் தூக்கி வீசி பின்னர் துர்க்கா வீதி ஊடாக யானை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.