;
Athirady Tamil News

கல்முனை தலைமையக பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்புப் பரிசோதனை (full video/photoes)

0

video link-
 
https://fromsmash.com/~GdENrdbW.-dt
 
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனை நிகழ்வும் கல்முனை உவெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று  நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் நெறிப்படுத்தலில், அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் கௌரவ மரியாதையைச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

நிகழ்வின் போது கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரியின் பாண்ட் வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்குச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

 இதனைத் தொடர்ந்து, காலை முதல் மாலை வரை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைப் பிரிவுகள், சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதிகள் மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், பொலிஸார் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களையும் பரிசோதித்ததுடன், உத்தியோகத்தர்களின் சுகாதார நடைமுறைகள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

 நிகழ்வின் இறுதி அங்கமாக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட வழிகாட்டல் வகுப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் சேவையை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.