;
Athirady Tamil News

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா – வைரல் வீடியோ

0

வாஷிங்டன்,

அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கும்போது நிலைதடுமாறினார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ். இவரது மனைவி உஷா. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். மேலும், இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளன. கடந்த ஜுலை மாதம் உஷாவுக்கு 4வதாக ஆண் குழந்தை பிறந்தது.

நிலைதடுமாறிய உஷா
இந்நிலையில், ஜேடி வான்ஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் மேரிலேண்ட் மாகாணத்திற்கு நேற்று சென்றார். மேரிலெண்ட்டில் உள்ள விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய நிலையில் ஜேடி வான்சின் மனைவி உஷா பிறந்து சில வாரங்களே ஆன தனது பச்சிளம் குழந்தையுடன் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக உஷா நிலைதடுமாறி ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழ முற்பட்டார். ஆனால், உடனடியாக சுதாரித்துக்கொண்ட உஷா தனது கைக்குழந்தையுடன் கீழே விழாமல் ஹெலிகாப்டரில் இருந்து பத்திரமாக இறங்கினார்.

அதேவேளை, உஷா கைக்குழந்தையுடன் தடுமாறியபோதும் அவரது அருகில் இருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் யாரும் அவருக்கு உதவாமல் வணக்கம் செலுத்தியவாறு நின்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.