ஸ்பெயினில் 69 பேர் பலியான ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் ராஜிநாமா!
ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், கடந்த வாரம் புதன்கிழமை (அக். 28) காலை மாட்ரிட் நகரத்தில் இருந்து செவில் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அந்த ரயில்களில் பயணித்த சுமார் 69 பேர் பலியாகினர். இந்தக் கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.