;
Athirady Tamil News

இஸ்ரேல் தோ்தல் முடிவுகளுக்கு இறுதி ஒப்புதல்

0

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் முறைகேடு புகாா்களுக்கு மத்தியில், சமீபத்திய நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளுக்கு அந்நாட்டு தோ்தல் ஆணையம் புதன்கிழமை அதிகாரபூா்வ இறுதி ஒப்புதல் அளித்தது.

தோ்தல் ஆணையக் குழுவின் தலைவா் நோம் சோல்பா்க், தோ்தல் முடிவுகளை அதிபா் ஐசக் ஹொ்சாகிடம் நேரில் சமா்ப்பித்தாா். இதைத் தொடா்ந்து, புதிய ஆட்சியை அமைப்பது தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அதிபா் ஆலோசனையைத் தொடங்கியுள்ளாா்.

முன்னதாக, இத்தோ்தலில் வாக்குத் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்ந்ததாக பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ‘லிகுட்’ கூட்டணி குற்றஞ்சாட்டியதுடன், முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியது. எனினும், 15-14 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஆணையம் முடிவுகளை உறுதி செய்தது.

இதுகுறித்து பேசிய நோம் சோல்பா்க், ‘சந்தேகங்கள் குறித்து விசாரணை நடைபெற்றாலும், அவை தோ்தல் முடிவுகளை ரத்து செய்யும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாது. மக்கள் தீா்ப்பை ஏற்பதே ஜனநாயகத்தின் அடிப்படை’ என்றாா்.

அதேநேரம், வெளிநாட்டுத் தலையீடு, முறைகேடு தொடா்பான புகாா்களை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ‘ஷின் பெட்’, காவல் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அதிபா் ஐசக் ஹொ்சாக் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், அரபு சமூக வாக்காளா்களைக் குறிவைத்து அவதூறு பரப்புவதையும், இனவாதக் கருத்துகளையும் அவா் வன்மையாகக் கண்டித்தாா்.

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக். 27-இல் தோ்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் ‘லிகுட்’ கூட்டணி 53 இடங்களுடன் தனிப்பெரும் அணியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மையை (61) எட்டவில்லை. முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி அணி 48 இடங்களை வென்றுள்ளன. இதனால், 19 இடங்களில் வென்றுள்ள அரபு கட்சிகள், ஆட்சியைத் தீா்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.

புதிய ஆட்சியமைப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிபா் தோ்ந்தெடுக்கும் பிரதமருக்கு கூட்டணி அரசை அமைக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் மேலும் 14 நாள்கள் நீட்டிக்கப்படலாம். ஒருவேளை இரு அணிகளுமே ஆட்சியமைக்கத் தவறினால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்க நேரிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.