;
Athirady Tamil News

கம்பஹா மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் குழு மோதல்

0

கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பில் யக்கல காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டுக்குத் தகுதி பெற்ற பின்னர் சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் எதிர்வரும் சனிக்கிழமை யக்கல காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.