6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு நிலை 2(அம்பர்)மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டம்: கொடபொல,நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன,இரத்தினபுரி மாவட்டம்: கலவான மற்றும் கொடகவெல ஆகிய பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் -வெலிமடை, ஹப்புத்தளை, எல்ல, பசறை, கந்தகெட்டிய, ஹல்துமுல்ல மற்றும் மீகஹகிவுல
கண்டி மாவட்டம் – யட்டிநுவர, மாதம்பே, ஹத்தரலியத்த, தும்பனே, உடுநுவர, தொலுவ, மெததும்பர மற்றும் உடதும்பர,
கேகாலை மாவட்டம்- ரம்புக்கனை, ருவன்வெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை மற்றும் மாவனெல்ல,
மாத்தளை மாவட்டம் – பல்லேபொல ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் -அம்பகமுவ, நோர்வூட், வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை மேற்கு, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை மற்றும் பெல்மடுல்ல ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளன.
மேலும், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.