;
Athirady Tamil News

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

0

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

வவுனியா வெளிவட்ட வீதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 12,320 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில், ரேவத சமந்த, மிதுசன், குமாரசிங்க சனத், சரித் ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.