;
Athirady Tamil News

இஸ்ரேலில் நெதன்யாகுவின் கொள்கைகளை மாற்றியமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம்

0

டெல் அவிவ்,

இஸ்ரேலில் நீண்ட காலமாகப் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு முடிவுகட்டும் வகையில், அங்கு புதிய நாடாளுமன்றம் பதவியேற்றுள்ளது. சமீபத்திய தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி பெரும் பான்மை இழந்ததைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் புதிய கூட்டணி அரசை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதற்காக அவருக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே, நெதன்யாகுவின் பழைய கொள்கைகளை ரத்து செய்யும் விதமாக ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்துவது, பிரதமர் பதவிக்காலத்திற்கு வரம்பு நிர்ணயிப்பது மற்றும் நீதித்துறையின் அதிகாரங் களைக் குறைக்க நெதன்யாகு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தங்களை ரத்து செய்வது ஆகியவை இதில் முக்கியமானவை. மேலும், தற்போதைய சபாநாயகரை நீக்கிவிட்டு, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, அரபு கட்சிகளின் ஆதரவுடன் அமையவுள்ள புதிய அரசு நாட்டுக்கு ஆபத்தானது என நெதன்யாகு விமர்சித்துள்ளார். அவரது பேச்சு வெறுப்பைத் தூண்டுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ள ஐசன்கோட், அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசை அமைப்பதே தமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.