;
Athirady Tamil News

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் அதிகார சபை அழைப்பு

0

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளை நுஎக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விடயங்களை அறிவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளைய (16) காலை 10 மணிக்கு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்து இது தொடர்பாகக் தமது கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை
கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரிக்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைய, இதுவரை 4,965 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன்படி அந்த எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 6,740 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேபோல், 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 2,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்கள், கப்பற் கட்டணம் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் என்பவற்றுடன் இந்நாட்டிற்கு எரிவாயு தொகையைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்தமையே இந்த விலை திருத்தத்திற்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.