;
Athirady Tamil News

தரம் 13 மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தலா 10,000 ரூபாய் வாய்ப்பு

0

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட தரம் 13 மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவு உதவி முகாமையாளர் நிரோஷன் விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான வாய்ப்பு
இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் பயிற்சிப் பாடநெறியைப் பூர்த்தி செய்து, அதற்கான பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.

இதற்குத் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 10,000 ரூபாய் பெறுமதியான முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற மாணவர்களுக்கு மாத்திரமன்றி, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே பங்குச் சந்தை தொடர்பான அறிவையும் நிதிசார் கல்வியறிவையும் மேம்படுத்தி, எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாகுவதற்கு ஊக்கமளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என நிரோஷன் விஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.