2,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்திற்கு வழிவிடுமாறு வலி. வடக்கு மக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

;
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வலி. வடக்கில் சுமார் 2ஆயிரம் ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாம் போராடி வருகிறோம். எமது காணிகளை விடுவித்தால் மாத்திரமே நாம் எமது காணிகளில் மீள குடியமர முடியும்.
