பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படாததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் – யாழில். திருமாவளவன்
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியும், அவற்றினை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என அதனை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் ஆர்வமின்றி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.