இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இன்றைய தினம் (27.11.2026) 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம்
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான நேரங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.