;
Athirady Tamil News

திருமதி.ச.ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாளில் “M.F” ஊடாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

திருமதி.ச.ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாளில் “M.F” ஊடாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

திருமதி ஜெயக்குமாரி அவர்களது பிறந்த தினத்தில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது..
##############################

பிரான்ஸ் நாட்டில் இன்றைய தினம் (20.01.2021) பிறந்த நாளைக் காணும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி (ஜெயா) அவர்களது பிள்ளைகளினால் தாயகப் பிரதேசத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு வியாபார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட சூழ்நிலையில், தொழில் வாய்ப்பின்றி நாளாந்த செலவுகளுக்கு செய்வதறியாது திண்டாடும் தனித்து வாழும் வயோதிபர்கள், கணவரை இழந்த குடும்பங்கள், வருமானம் இழந்த குடும்பங்கள் என பலதரப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது தாயாரான திருமதி ஜெயக்குமாரி அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பின் மூலமாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கோயில்குளத்தில் வசிக்கும் வயதான அம்மாவுக்கு அவரது இல்லம் சென்று உணவுப் பொதி வழங்கப்பட்டது.

நிதிப்பங்களிப்பு வழங்கிய திருமதி ஜெயக்குமாரி அவர்களது பிள்ளைகளுக்கு நன்றி கூறுவதோடு, திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

“நலிவற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.