;
Athirady Tamil News

முந்திச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து ; லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் சாரதி பலி

0

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.