;
Athirady Tamil News

அச்சுவேலி அமரர் ராசாத்தி அம்மையார் நினைவாக, “M.F” ஆத்மசாந்தி பூசை வழிபாடு.. (படங்கள் வீடியோ)

0

அச்சுவேலி அமரர் ராசாத்தி அம்மையார் நினைவாக, “M.F” ஆத்மசாந்தி பூசை வழிபாடு.. (படங்கள் வீடியோ)

அமரர் ராசாத்தி அம்மையார் நினைவாக ஆதிமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசை வழிபாடு.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புளியங்குளம் பெரியமடுவில் உள்ள புராதான அம்மன் கோயிலான ஆதிமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமரத்துவடைந்த இராசாத்தி என அழைக்கப்பட்ட திருமதி.தர்மலிங்கம் நாகேஸ்வரி அம்மையார் அவர்களுடைய நினைவாக அன்னதான பூசையும் விசேட மோதகப் பூசையும் இடம்பெற்று ஆத்மசாந்தி பூசையுடன் நினைநாள் நிகழ்வு நிறைவுபெற்றது.

அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் இராசாத்தி அம்மா எனும் திருமதி.தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் நினைவாக சுவிஸில் உள்ள அன்னாரின் குடும்பத்தினரின் (மகனின்) நிதிப்பங்களிப்பில் “சிவராத்திரி தினமான” இன்றையதினம் வவுனியா வடக்கு புளியங்குளம் பெரியமடுவில் அமைந்துள்ள வன்னியின் மிகப் பழமை வாய்ந்த ஆலயமான ஆதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி வழிபாட்டுடன் வருகை தந்தோருக்கு விடேச மதிய உணவும் அம்மனுக்கு விசேட மோதகப் பூசையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு.மாணிக்கம் ஜெகன் மற்றும் அங்கத்தவர்களான திருமதி மகேஸ்வரி, திருமதி பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இக்கிராமத்தின் மாணவமாணவிகளுக்கு சென்ற வாரத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் அலுவலகத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து மிகத் தொலைவில் உள்ள கிராமமான பெரியமடு கிராமத்திலிருந்து மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளுக்கு நடந்து செல்லும் ஆர்வத்தை கௌரவப்படுத்தவே அவர்களின் வறிய நிலையைப் பார்த்து கற்றல் உபகரணங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பரம்பரை பரம்பரையாக நல்லதம்பி வழித்தோன்றல் வந்தவர்களினால் பூசை செய்யப்பட்டு வரும் இக்கோயிலில் இன்றுவரை பழைய ஆதி ஏட்டின் மூலமாகவே பூசை நடாத்தப்பட்டு வருவதாக தற்போது பூசை செய்து வரும் பூசாரி அவர்கள் தெரிவித்தார். அந்தவகையில் பூசாரியாக இக்கோயிலில் தொண்டு செய்த பூசாரி.வீரவாகு, பூசாரி.இளஞ்சிங்கம், பூசாரி.கணபதிப்பிள்ளை, பூசாரி.நேசரத்தினம், பூசாரி.பாக்கியநாதன், பூசாரி.சௌந்தர்,.. என நீண்டு செல்லும் பரம்பரை பூசாரிகளினால் ஆலயம் பொலிவுடன் அம்மனின் அருளாட்சி நடந்து வருகிறது.

ஆரம்பத்தில் வில்வமரத்தடியில் குடிகொண்ட ஆதிமுத்துமாரி அம்மன் பழைய ஏட்டின் பிரகாரம் ஆண்டுப் பொங்கல் நடைபெற்று தொடர்ந்து குளிர்த்தி பண்டம் எடுத்து 5 பானையில் வளந்து வைத்து பெரும் பூசையுடன் நிறைவு பெறும். கிராமிய வழிபாட்டு வடிவம் மாறாது பரம்பரையாக வழிபாடு தொடர்ந்து வரும் கிராமிய ஆலயமாக இவ்வாலயம் இருப்பது அதிசயத்தக்க விடயமாகும். வழமை போலவே இவ்வருடமும் வருடாந்த பொங்கள் எதிர்வரும் 20.08.2021 அன்று தொடங்கவுள்ளது.

இவ்வாறான தமிழ் பண்பாட்டு வழிபாட்டு விழுமியங்களை தேடித் தேடி கண்டுபிடித்து அதற்கான ஆதரவினை வழங்கி வருவதோடு, சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மற்றுமோர் நிகழ்வாக அமரர் ராசாத்தி அம்மையாரின் ஆத்ம சாந்தி நிகழ்வும் நடைபெற்றது .மனதுக்கு ஆறுதலான நிகழ்வாக இருந்தது வரவேற்கத்தக்கது.

அமரர் இராசாத்தி எனும் திருமதி.தர்மலிங்கம் நாகேஸ்வரி அம்மையாருக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

11.03.2021

https://www.youtube.com/watch?v=EBdYB68LXds
You might also like

Leave A Reply

Your email address will not be published.