;
Athirady Tamil News

மக்களை நேசிக்கும் மானுடத்தின் பிறந்தநாளில், சமூகப்பணியில்.. மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

0

மக்களை நேசிக்கும் மானுடத்தின் பிறந்தநாளில், சமூகப்பணியில்.. மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நாட்டின் பெரும் வர்த்தகரும் பெயர் சொல்லாமல் பலவிதமான பேருதவிகளை செய்து வரும் பெருந்தகையின் பிறந்தநாளில் பிறந்தநாள் கொண்டாடுபவரின் விருப்பத்திற்கேற்ப மிக எளிமையான வகையில் ஒருசிலர் கேட்டுக் கொண்ட உதவிகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் வவுனியா தேக்கம் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சிகளை தினந்தோறும் நடாத்தி வரும் உதைபந்தாட்டப் பயிற்சியாளர் பிரபு அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேக்கம் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் உதைபந்தாட்ட பயிற்சி பெறுவோருக்கான விளையாட்டு உபகரணங்கள் இளஞ்சிறார்களான வீரர்கள் புடைசூழ பயிற்சியாளரிடம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் வழங்கப்பட்டது.

“பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எங்கள் பயிற்சியாளரின் பெரும் முயற்சியில் இந்த உதவி கிடைத்திருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்தித் தந்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு மனமாற நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, இன்றைய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பெயர் சொல்லாத, பெருமை கொள்ளாத கனடாவில் வசிக்கும் வர்த்தக அன்பருக்கும் எமது பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக உலருணவுப் பொதி தேவைப்படும் உக்குளாங்குளத்தில் ஒருசில வறிய நாளாந்தம் கூலி வேலை செய்யும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

<strong>”மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
<a href=”http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1“>http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1</a></strong>

You might also like

Leave A Reply

Your email address will not be published.