;
Athirady Tamil News

அஞ்சனா ஜானவி பிறந்தநாளை முன்னிட்டு மூன்றாம் கட்டமாக, வவுனியாவில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ படங்கள்)

0

அஞ்சனா ஜானவி பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி முல்லைத்தீவைத் தொடர்ந்து, வவுனியாவிலும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
############################

பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா மற்றும் ஜானவி ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் தாயகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டகிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்றைய நாளில் செல்வி.அஞ்சனா செல்வி.ஜானவி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சண்முகபுரம் கிராமம் மற்றும் வவுனியா மன்னார் வீதி பூவரசங்குளம், நெளுக்குளம், பாலாமைக்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், கணவர் மற்றும் தந்தை இல்லாத குடும்பங்கள், தொழில் வாய்ப்பை இழந்த குடும்பங்கள் என பலதரப்பட்ட தேவைகள் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

தாயகத்தில் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும், பிரான்ஸ் பாரீசில் வசிப்பவர்களுமான திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்லக் குழந்தைகளும் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான “சமூகநேயன்” ராஜூ என அழைக்கப்படும் திரு.திருமதி சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் பேரப்பிள்ளைகளுமான செல்வி அஞ்சனா மற்றும் செல்வி ஜானவி ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் தாயக மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட உதவி தேவைகளுடைய குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அவ்வாறே இன்றைய நாளில் வவுனியா மாவட்டத்தில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கையினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் முன்னெடுத்தது. அந்தவகையில் வெங்கலசெட்டிக்குளம் சண்முகபுரம் கிராமத்தில் பொது அமைப்புக்களில் செயற்படும் சமூக ஆர்வலர்களினால் இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் செல்விகள்.அஞ்சனா, ஜானவி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளரோடு, உப செயலாளரான திருமதி பெரியண்ணன் பரிமளா, பாலர்பாடசாலை ஆசிரியை திருமதி வேஜினி ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

முன்னதாக செல்வி அஞ்சனா மற்றும் செல்வி ஜானவி ஆகியோரது பிறந்தநாளினை கேக் வெட்டி பிறந்த நாள் பாடல் பாடி தாயக சிறுவர் சிறுமியர் ஏற்கனவே கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சுவிஸ்வாழ் சமூகநேயன் சுபாஸ்கரன் அவர்களது பேரக் குழந்தைகளின் பிறந்தநாள் சிறப்பாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை செல்விகள்.அஞ்சனா ஜானவி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவிக்காக நிதிப்பங்களிப்பு செய்த பெற்றோர்களான பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் உமாசங்கர் ஜெனனி தம்பதிகளுக்கு உதவி பெற்றுக் கொண்ட தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

பிறந்த நாளினைக் கொண்டாடும் செல்வி அஞ்சனா செல்வி ஜானவி அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக சொந்தங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.07.2021

பிரான்ஸ் செல்விகள்.அஞ்சனா, ஜானவி பிறந்தநாளில்; முல்லைத்தீவில் வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

பிரான்ஸ் அஞ்சனாவின் பிறந்த நாளன்று, கிளிநொச்சியில் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.