;
Athirady Tamil News

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்)

0

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கி கொண்டாட்டம்.. (படங்கள்)
#########################

புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களது பிறந்தநாளை அவரது பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்று வவுனியா காத்தார்சின்னக்குளம் தரணிக்குளம் என்ற மிகவும் பின்தள்ளிய கிராமத்தில் மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி கவிதா அவர்களின் ஒழுங்கமைப்பில். நடைபெற்றது.

கிராமத்தில் வாழும் சிறுவர் சிறுமிகளோடு பெற்றோர்களும் கலந்து கொண்டு லண்டன் வாழ் யோகி என அழைக்கப்படும் யோகலிங்கம் அவர்களை வாழ்த்திச் சென்றனர்..

குறித்த நேரத்தில் பிறந்த நாள் நிகழ்வு ஆரம்பிக்க கலந்து கொண்ட அனைவரும் பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி தமது வாழ்த்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் கற்றல் உபகரணம் வழங்கப்பட்டு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.

கற்றல் பொதிகளை மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி கவிதா மற்றும் இன்று யோகி அவர்களின் பிறந்த நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி கீர்த்திகா நாகராசா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

கௌரி விரதம், கொரோனா பயத்தையும் தாண்டி பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்தோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது..

அத்தோடு இன்றைய நாளில் பிறந்த நாளினை கொண்டாடும் யோகி அவர்கள் பல்வேறு சமூகப் பணிகளை முன்னின்று செய்பவர். புலம்பெயர் தேசமான லண்டனில் தாயக உறவுகளுக்கு ஏற்படும் வதிவிட பிரச்சினைகள் தொடக்கம் சட்ட சிக்கல்கள் வரை இவரின் அரசியல், சமூக பங்களிப்பு ஆளுமைகளினால் நிவர்த்தி செய்து உதவி புரிந்து வருபவர்.

இவ்வாறான சமூக நோக்குடன் செயல்படுபவரை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் இன்றைய நாளில் வாழ்த்தி கௌரவித்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை இன்றைய நிகழ்வுகளில் நிதிப் பங்களிப்பு தந்த யோகி அவர்களின் பிள்ளைகளுக்கும் தாயக உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவிக்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

20.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.