;
Athirady Tamil News

வரி விதிப்பு; அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு

0

அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.