;
Athirady Tamil News

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில், தாயகத்தில் பல்வேறு சமூகப் பங்களிப்புகள்.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில் தாயகத்தில் பல்வேறு சமூகப் பங்களிப்புகள்.. (வீடியோ, படங்கள்)
###############################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த முருகனடியாருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை தாயக கிராமங்களில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா வெளிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் பாடசாலை மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்தநாள் மதிய உணவு வழங்கும் நிகழ்வில் பங்கு கொண்டனர்.

பாடசாலை முடிந்ததும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சுவிஸ் வாழ் உறவான ராஜூ அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பானதாகும்.

இந்நிகழ்வில் கிராமசேவகர் திருமதி சுபாஸ் பவித்திரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.சுதர்மினி, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா அமைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன், நிர்வாகசபை உறுப்பினர் திருமதி பவளராணி, திருமதி.சுகர்தினி, மற்றும் சமுர்த்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ச்சியாக செய்துவரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு மதிய விசேட உணவினை வழங்கிய திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.01.2022

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில் தாயகத்தில் பல்வேறு சமூகப் பங்களிப்புகள்.. (வீடியோ)

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.