;
Athirady Tamil News

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

0

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த முருகனடியாருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. குறிப்பாக வேறுவேறு கிராம மக்களுக்கு உதவுமாறு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் கேட்டதுக்கு இணங்க, முதலாவது நிகழ்வானது உடனடி ஏற்பாட்டில் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே..

மேற்படி முதலாவது நிகழ்வானது புளொட் அமைப்பின் ஆரம்பகால மூத்த உறுப்பினரான தோழர்.ஜெஸ்மின் எனும் திருமதி ஹென்றிபெரேரா ஜெயபாலினி அவர்களிடம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, உடனடியாக சிறப்பாக நடைபெற்றது. வவுனியா செட்டிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராம பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை ராஜு எனும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர். இதேவேளை ராஜூ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், பெறுமதியான உலருணவுப் பொதிகளும், அரிசிப் பொதிகளும், உலருணவுகளும் வழங்கப்பட்டதுடன், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே..

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் இரண்டாவது நிகழ்வாக வன்னி எல்லைக் கிராமமொன்றில் ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, பெறுமதியான உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் வறிய குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் மாலைநேர வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கான கற்றல் வசதியினை மேம்படுத்தும் வகையில், கற்றலுக்கு தேவையான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜு எனும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.02.2023

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.