யாழ் இந்துவில் 82 9A
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 345 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளையும், 73 மாணவர்கள் 8A பெறுபேறுகளையும் 33 மாணவர்கள் 7A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
பரீட்சையில் தோற்றிய 345 மாணவர்களில் 342 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறித்துள்ளது.