;
Athirady Tamil News

போதை பொருள் தகராறு; பறிபோன இளைஞனின் உயிர்

0

காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் தகறாரில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கிங்தொட்ட, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞன் ஆவார்.

போதைப்பொருள் பொதி ஒன்றுக்காக ஏற்பட்ட தகராறு
போதைப்பொருள் பொதி ஒன்றுக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.