;
Athirady Tamil News

மைசூரு மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனைக்காக குவியும் மக்கள் – பின்னணி என்ன?

0

மைசூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்வதற்காக குவிகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை காத்திருந்து இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருத்துவமனை தரப்பும், ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்​த செய்திகள் பரவிய பின்னரே இந்த அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மருத்துவ கண்காணிப்பாளரின் அறிவுரை: இது குறித்து மைசூரு ஜெயதேவா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்ட கேஎஸ் சதானந்த் கூறுகையில், “ஊடக செய்திகளைப் பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்துவிடாது. மேலும், மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே நாடுவதை விடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும் செல்லலாம்.

இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டும் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதைத் தடுத்துவிடாது. மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். அதைவிடுத்து அனைவரும் இங்கே குவிந்தால், ஏற்கெனவே உள்நோயாளிகளாக இருக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க இயலாமல் போய்விடும். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.

பின்னணி என்ன? கர்நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இவர்களில் 6 பேர் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும் 20-க்​கும் மேற்​பட்​டோர் திடீர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தனர். இந்நிலையில், மைசூரு ஜெயதேவா மருத்துவமனையிலும், அதன் பெங்களூரு கிளையிலும் இதயப் பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கை சமீப நாட்களில் 8% அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஹாசன் மற்றும் சுற்றுவட்டார மாவட்டஙக்ளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு: இதற்கிடையில் திடீர் மரணங்கள் குறித்து ஆய்வு செய்​வதற்​காக கர்​நாடக அரசு 10 மருத்​து​வர்​கள் அடங்​கிய நிபுணர் குழுவை அமைத்​தது. மருத்​து​வ நிபுணர் குழு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது.

அதனை பெற்​றுக்​கொண்ட பின்​னர்​,​ தினேஷ் குண்டு ராவ் கூறிய​தாவது: கரோனா தொற்று பரவலுக்கு பிறகு மாரடைப்​பு​கள் சற்று உயர்ந்​துள்​ளதை அறிக்கை உறுதி செய்​துள்​ளது. அதேவேளை​யில் கரோனா தடுப்​பூசி​யால் இந்த பாதிப்பு ஏற்​பட​வில்லை என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. கரோனா தொற்​றுக்கு ஆளான நபர்​களுக்கு நீரிழி​வு, ரத்த அழுத்த நோய் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. திடீர் மாரடைப்​புக்கு இது​வும் ஒரு காரணம் என்று அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது

இளம்​வயது மாரடைப்பு மரணங்​களை தடுக்க மருத்​து​வ​மனை தவிர பிற இடங்​களில் மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்​தால் கட்​டா​யம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்​டும். அப்​போது தான் உயி​ரிழப்​புக்கு சரி​யான காரணம் என்ன என்​பது தெரிய​வரும். இவ்​வாறு தினேஷ் குண்​டு​ராவ்​ தெரிவித்​தார்​.

You might also like

Leave A Reply

Your email address will not be published.