;
Athirady Tamil News

யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள்.!! (படங்கள், வீடியோ)

0

இது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான யுகமாகும். யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள்.

யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று (25.03.2022) புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைப்புச் செயலாளர் திரு. குலேந்திரன் சிவராம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சொட்டு நீர்ப்பாசனம், உயர் பாத்தி மற்றும் பொலித்தீன் மூடுபடை தொழில்நுட்பத்தின்கீழ் இந்த முன்மாதிரி உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையானது மேற்கொள்ளப்பட்டது. கடந்த 01.01.2022 அன்று 8 பரப்பு விஸ்தீரண காணியில் 45cm * 30cm நடுகை இடைவெளியில் “சசி“ இன உருளைக்கிழங்குகள் இச்செயற்றிட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டன.

இந்த அறுவடை நிகழ்வில் உரையாற்றிய குலேந்திரன் சிவராம் அவர்கள், விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் அவர்கள் சேவையாற்றிய காலத்தில், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதன்படி, நவீன முன்மாதிரி முறையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மாமரச் செய்கை, மிளகாய்ச் செய்கை, உருளைக்கிழங்கு செய்கைகளுக்காக மானியங்களை பெற்றுக்கொடுத்தோம். இவ்வாறு நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு மானியங்களை வழங்குவதானது கூடிய அர்த்தம் மிக்கதாகிறது. தற்போதுள்ள நிலையில் செலவுகளை கட்டுப்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும்போதே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மீண்டுமொரு விவசாய யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். ஸ்ரீமாவோ காலத்தில் எமது மண்ணில் கல்வீடுகள் கட்டப்பட்டதை போல எமது மண்ணின் விவசாயிகளினால் சவால்களை தாண்டிய வெற்றியை பதிவுசெய்யமுடியும். விவசாயிகளை நம்பியே எமது இலங்கை தேசம் உள்ளது, விவசாயிகள் உணவுப்பற்றாக்குறையை ஒருபோதும் ஏற்படவிட மாட்டார்கள். எனவே அதிகளவு பணப்பயிர்களையும் உணவுப்பயிர்களையும் பயிரிட்டு இந்த பொருளாதார நெருக்கடியை விவசாய வெற்றியின் ஊடாக மீட்டெடுப்போம் எனத் தெரிவித்தார்.

நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர், மாகாண விவசாய பிரதி பணிப்பாளர், கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர், விவசாய நவீனமயமாக்கல் திட்ட விவசாய விஞ்ஞானி, விவசாய போதனாசிரியர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


You might also like

Leave A Reply

Your email address will not be published.