;
Athirady Tamil News

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன் திட்டங்களை செயற்படுத்தி முடியுங்கள்

0

கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்காக தனியாருடன் போட்டியிடக்கூடியவாறு புத்தாக்க சிந்தனைகளை நோக்கிச் செயற்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன் திட்டங்களை செயற்படுத்தி முடிக்கவேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்து முடிக்காமல் இருக்க முடியாது என தெரிவித்தார்.

இதன் பின்னர் மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், பொறியியல் சேவை ஆகியோரும், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அகல்யா செகராஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.