;
Athirady Tamil News

மேலும் 2,706 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு சற்று குறைவு..!!

0

இந்தியாவில் கொரோனா வைரசால் புதிதாக 2,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

நேற்று முன்தினம் பாதிப்பு 2,685 ஆக இருந்தது. நேற்று 2,828 ஆக உயர்ந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 749 ஆக உயர்ந்தது.

கேரளாவில் 846, மகாராஷ்டிராவில் 550 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 357, கர்நாடகாவில் 241, அரியானாவில் 154, உத்தரபிரதேசத்தில் 146 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 440 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,698 ஆக உயர்ந்தது. இது நேற்றை விட 611 அதிகம் ஆகும்.

கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 23 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என மேலும் 25 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,611 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும், இதுவரை 193 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 2,28,823 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 2,78,267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 85 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.