14 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்!!

பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 14 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தரம் 1,2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் இருவருமாக மொத்தமாக 16 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் இன்று (18) காலை சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு பாடசாலை வளாகத்தில் இருந்த குளவி கூடே இவ்வாறு களைந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொட்டியுள்ளன.