;
Athirady Tamil News

பெண்களுக்கு பாதுகாப்பற்ற பெரு நகரங்கள் பட்டியல் – தலைநகர் டெல்லி முதலிடம்..!!

0

நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும். இந்தியாவின் அனைத்து 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியில் பங்கு மட்டும் 32.20 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் கற்பழிக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி கற்பழிப்பு ஆகியவை அதிக இடம்பிடித்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து 2-வது இடத்தில் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளது. 3-வது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. மும்பையில் 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.