;
Athirady Tamil News

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்புக்கு 1.51 லட்சம் பேர் மனு..!!

0

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க 11 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

1.51 லட்சம் பேர் மனு
முகாமில் ஒவ்வொரு வாக்காளரும், சுய விருப்ப அடிப்படையில் வந்து, அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் படிவம் 6-பி வாங்கி பூர்த்தி செய்து வழங்கினர். அதன்படி கெங்கவல்லி தொகுதியில் 14 ஆயிரத்து 967 பேர் மனு அளித்தனர். அதேபோல் ஆத்தூர் -14,524 பேர், ஏற்காடு- 11,529 பேர், ஓமலூர்- 18,796 பேர், மேட்டூர்- 16,926 பேர், எடப்பாடி – 14,862 பேர், சங்ககிரி 13,741 பேர், சேலம் மேற்கு- 16,930 பேர், சேலம் வடக்கு -9,458 ேபர், சேலம் தெற்கு -6,201 பேர், வீரபாண்டி- 13,415 பேர் என மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் மனு அளித்தனர். இதில், வாக்காளர் மொபைல் செயலி, இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் இணைத்து கொண்ட–வர்களும் அடங்கும்.

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்
கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி இணைப்பு பணி தொடங்கிய நிலையில் அதற்கான முதல் சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட 3 ஆயிரத்து 171 பேர் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.