;
Athirady Tamil News

ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் – விசாரணைக்கு உத்தரவு..!!

0

பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, பல்கலைக்கழக பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில், மாணவர்கள்தான் தங்களது புகைப்படம் மற்றும் இதர தகவல்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். அவற்றை பரிசீலித்து, பல்கலைக்கழகம் ஆன்லைனில் அனுமதி சீட்டை வெளியிடும். சில குறும்புக்கார மாணவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கும் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.