;
Athirady Tamil News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன அதிபர் ஜி ஜின்பிங் உஸ்பெகிஸ்தான் பயணம்..!!

0

கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் அதிபர் ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்கட்டமாக 14-ம் தேதி கஜகஸ்தான் செல்லும் அவர், பின்னர் அங்கிருந்து உஸ்பெகிஸ்தானுக்குச் செல்கிறார். அங்கு சமர்கண்ட் நகரில் 15, 16 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார் என தெரிவித்துள்ளது. அதிபர் ஜி ஜிங்பிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 நாள் பயணமாக மியான்மருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.