;
Athirady Tamil News

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

0

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

இந்த நிலையில், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை. கடந்த ஜூனில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதவிவையும் ரத்து செய்தது. இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 284 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2014-ல் இருந்து 2019 வரையான காலத்தில் சட்டமன்ற தேர்தலிலோ நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடாததால் கட்சி பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னங்களை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்கள் இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.