முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொள்ளை
கம்பஹா – களனி பிரதேசத்தில் நபரொருவரை தாக்கி முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் களனி, கோனவல பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 58 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.