;
Athirady Tamil News

மாநில சட்ட மந்திரிகள் மாநாடு: குஜராத்தில் இன்று தொடங்குகிறது..!!

0

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத்துறை மந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் மந்திரி கிரண் ரிஜிஜூ முக்கிய உரையாற்றுகிறார்.

மாநாடு, 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய சட்டமுறை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. இதைப்போல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரிகளின் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அந்த துறையின் மத்திய மந்திரி ஆர்.கே.சிங் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மத்திய எரிசக்தித்துறை இணை மந்திரிகள் கிருஷன்பால் குர்ஜர், பகவாந்த் கூபா மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மின்சார கணக்கீடு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன. 2020-2021-ம் நிதியாண்டுக்கான எரிசக்தி நிறுவனங்களின் செயல்திறன் குறித்த அறிக்கையும் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.